Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
[01 - May - 2008] [Font Size - A - A - A]
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்ட `பிரபாகரன்' சிங்களத் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் நேற்று தொல்.திருமாவளவன் கூறியதாவது ;

ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் "பிரபாகரன்" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட சிங்களப் படப்பிரதிகளை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து இந்திய மத்திய அரசு கைப்பற்றி முற்றாக அழிக்க வேண்டுமென்று சென்னை மாநகர முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தோம். அந்த வழக்கை விசாரித்த அந் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை அப்படத்துக்கு தடை விதித்திருந்தது.

இந் நிலையில் வழக்கின் மீது உடனே விசாரணை நடத்தவேண்டுமென்று சிங்கள திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சட்ட விதிமுறைகளுக்கு எதிராக வழக்கைத் தொடருவோரின் கையொப்பம் இல்லாமல் சட்டவாளரே கையெழுத்திட்டு அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதனைப் பற்றி கவலைப்படாமலேயே கீழ் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதால் எமக்கு ஐயம் ஏற்பட்டது. கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு உள்நோக்கமும் அழுத்தங்களும் இருப்பதாகக் கருதுகின்றோம்.

எனவே முதலாவது உரிமையியல் நீதிமன்றத்திலிருந்தும் அந்த நீதிபதியிடமிருந்தும் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென்று கோரி தலைமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். எமது மனுவை ஏற்று எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி வரை கீழ் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ள தலைமை நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

தலைமை நீதிமன்றில் 13 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com