மணலாறு பகுதியிலிருந்து படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் வவுனியா வடக்கு நெடுங்கேணியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மணலாறுப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் நேற்று புதன்கிழமை காலை கடும் ஷெல் தாக்குதலை நடத்தினர்.
இந்தச் ஷெல் தாக்குதலில் நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாதலிங்கம் சண்முகராசா என்பவர் (வயது 52) உயிரிழந்துள்ளார்.
இதேநேரம் மணலாறு சிறீபுர பகுதியில் நேற்றுக் காலை விடுதலைப்பலிகள் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
மணலாறின் வடமேற்குப் பகுதியிலிருந்தே புலிகள் இந்த ஷெல் தாக்குதலை நடத்தியதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதலில் 66 வயதான ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.