மன்னாரில் நேற்று புதன்கிழமை முன்நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் காத்தான்குளம் - கறுக்காய்க்குளம் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் படையினர் பலத்த ஷெல் தாக்குதலுடன் முன்நகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தினர். மாலை 4 மணிவரை படையினர்மீது விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல் நீடித்தது.
இத்தாக்குதலில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன், 20 படையினர் படு காயமடைந்தனர். படையினருக்கு ஆதரவாக எம்.ஐ - 24 ரக ஹெலிகொப்டர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.