மன்னாரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடும் மோதல் நடைபெற்று வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பறையகுளம், கருக்காய்குளம், காந்தான்குளம் பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் படையினர் பாரிய முன் நகர்வு முயற்சியை ஆரம்பித்தனர்.
ஆட்லறி ஷெல் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல் சகிதம் படையினர் இந்தப் படைநகர்வுகளை ஆரம்பித்தனர்.
தொடர்ந்தும் நடைபெற்று வரும் இந்தக் கடும் மோதலில் புலிகள் தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
இந்த மோதலில் படையினர் தரப்பில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சமர் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் படையினர் கூறினர்.