Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
[01 - May - 2008] [Font Size - A - A - A]
*சிங்களவர் விழிப்புடனிருக்க வேண்டும்; தேசப்பற்று தேசிய இயக்கம்

எம்.ஏ.எம்.நிலாம்

வடக்கை தமிழர்களுக்கும், கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்த்து தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்ள பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இத்தருணத்தில் சிங்கள மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அரச பலத்துக்கும் தேசத்துரோகிகளின் பலத்துக்குமிடையிலான போராகவே காணப்பட வேண்டியுள்ளதாகவும் சிங்கள மக்கள் ஒன்று படுவதன் மூலமே இதனை முறியடிக்க முடியுமெனவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர்மாநாடு நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் தேசிய நூலகச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதன் தலைவர் குணதாச அமர சேக்கர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கிழக்குமாகாணத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றது. கிழக்கை முஸ்லிம்களின் தாயகமாக பிரகடனப்படுத்திக் கொள்வதில் முஸ்லிம் தரப்பு முனைப்புக் காட்டி வருகின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி துணைபோய்க் கொண்டிருக்கின்றது. இதேபோன்று நாளை வடக்கை முழுமையாக தமிழர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க அரசாங்கத்தரப்பு தயாராகி வருகின்றது. இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் இதனை கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

கிழக்குத் தேர்தலில் சிங்கள மக்கள் தெளிவான சிந்தனையுடன் செயற்படத் தவறினால் இந்த நாடு பிளவு படுவதை யாராலும் தடுக்க முடியாது போகலாம். நாளை நிச்சயமாக வடக்கு கிழக்கின் எல்லைப்புறங்களிலிருந்தே சிங்கள மக்கள் விரட்டியடிக்கப்படலாம். இனிமேலும் மௌனமாக இருக்கமுடியாது. கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் இருப்புக்குச் சவாலாகவே இத்தேர்தல் காணப்படுகிறது. எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஜே.வி.பி.யிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ புதிய கட்சி அமைக்கப் போவது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த அமரசேக்கர விமல் வீரவன்ஸ புதிய கட்சி அமைப்பதற்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்துக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாதெனவும் எமது இயக்கமானது சுயாதீனமானதெனவும் குறிப்பிட்டார். நாட்டுக்கு நல்லதைச் செய்வோரை ஆதரிப்போம், விமல் வீரவன்ஸவின் புதிய கட்சி நல்லதைச் செய்தால் நிச்சயம் அதனை ஆதரிப்போம். ஆனால் புதிய கட்சி ஆரம்பிக்கப் படுவதற்கும் எமது இயக்கத்துக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com