இலங்கையின் பணவீக்கம் முன்னொருபோதுமில்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் 25 சதவீதமாக அதிகரித்திருப்பதை புதிய விலைச்சுட்டெண் காட்டியிருக்கும் அதேவேளை பழைய அளவீடான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 29.9 சதவீதமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் புள்ளிவிபரவியல் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை இத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
மார்ச் மாதம் 23.8 சதவீதமாக பணவீக்கம் இருந்ததாக புதிய கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தொகை ஏப்ரலில் 1.8 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை 1.32 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்தது.