ஏ.தேவராஜா
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி நாளை 2 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகின்றது. இப்போட்டியில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றுகின்றன.
50 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்தும் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், குருநாகல் வெலகெதர மைதானத்திலும் நடைபெறும். இறுதி ஆட்டம் 11 ஆம் திகதி வெலகெதரவில் நடைபெறும்.
14 வீராங்கனைகளை உள்ளடக்கிய இலங்கை அணிக்கு சசிகலா ஷ்ரீவர்தனா தலைமை தாங்குகின்றார். இந்திய அணிக்கு மிதலை ராஜும், பங்களாதேஷ் அணிக்கு சல்மா ஹட்டனும், பாகிஸ்தான் அணிக்கு றூத் மும்தாஜும் தலைமை தாங்குகின்றார்கள்.
2 ஆம் திகதி இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளையிலும், இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி வெலகெதர மைதானத்திலும் நடைபெறும்.
3 ஆம் திகதி, இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளையிலும், பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி, வெலகெதர மைதானத்திலும் நடைபெறும்.
5 ஆம் திகதி, இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளையிலும், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் வெலகெதர மைதானத்திலும் நடைபெறும்.
6 ஆம் திகதி இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வெலிகெதர மைதானத்திலும், இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளையிலும் நடைபெறும்.
8 ஆம் திகதி, இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டி, வெலகெதரவிலும், பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளையிலும் நடைபெறும்.
9 ஆம் திகதி, இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி வெலகெதரவிலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளையிலும் நடைபெறும்.
11 ஆம் திகதி இறுதி ஆட்டம் வெலகெதர மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் யாவும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.