விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் தொடரின் பரிசுத் தொகை 4.7 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் விம்பிள்டன் போட்டிகளில் அறிமுகமாகும் இந்தப் புதிய பரிசுத் தொகை 11.8 மில்லியன் பவுண்ஸ்கள் அல்லது 23.46 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் சாம்பியன் கிண்ணத்தை வெல்பவர்களுக்கு 750,000 பவுண்ஸ்கள் பரிசுத் தொகை, அதாவது கடந்த ஆண்டை விட 7.1 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இங்கிலாந்து கிளப் இதனை நேற்று முன்தினம் அறிவித்தது.
விம்பிள்டன் டெனிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர் ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடைபெறுகிறது.