Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கொல்கத்தாவில் சச்சினுக்கு விருது
[01 - May - 2008] [Font Size - A - A - A]
கொல்கத்தா விளையாட்டு செய்தி நிருபர்கள் சங்கம் வழங்கும் இந்தத் தலைமுறையின் சிறந்த விளையாட்டு வீரர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய அணித் தலைவரும் சக வீரருமான சவ்ரவ் கங்குலியும் நடிகர் தேபஷ்ரீராயும் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினர்.

விருதை பெற்றுக் கொண்டு பேசிய சச்சின் நன்றி தெரிவித்ததோடு, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒரு தனிச்சிறப்பான உணர்வு என்றார்.

அணியிலிருந்து நீக்கப்பட்டு பின் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டு திறமையை நிரூபித்ததற்காக கங்குலிக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா விளையாட்டுச் செய்தி நிருபர் சங்கம் பட்மின்ரன் வீரர் பிரகாஷ் படுகோனிற்கு வாழ்நாள் சாதனை விருது கொடுத்து கௌரவித்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவிற்கு சிறந்த இளம் வீரர் விருது கிடைத்துள்ளது.

Email this page Your Opinion Print this page
சனத் அபார பந்துவீச்சு; பிராவோ அதிரடி ஆட்டம் மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது
ஸ்ரீசாந்தை விமர்சித்த நடுவர் 2 போட்டியிலிருந்து இடைநிறுத்தம்
`தென் ஆபிரிக்க வீரர்களையும் ஹர்பஜன், ஸ்ரீசாந்த் திட்டினார்கள்'
இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கொல்கத்தாவில் சச்சினுக்கு விருது
தடை செய்யப்பட்ட ஹர்பஜனுக்கு மற்றொரு அதிர்ச்சி படங்கள் இடம்பெற்ற விளம்பர பதாகைகள் அகற்றல்
விம்பிள்டன் டெனிஸ் தொடருக்கான பரிசுத்தொகை மேலும் அதிகரிப்பு
ஹர்பஜன் மீது இந்திய கிரிக்கட் சபை கருணை காட்டுமென்று என்ஜினியர் நம்பிக்கை
ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை ஆரம்பமாகிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com