கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள மாநகரசபை நூலகத்துக்கு வழமையாக செல்லும் ஒரு வாசகர் தனது ஆதங்கத்தை என்னிடம் வெளியிட்டார்.
இவர், முக்கியமான ஆவணங்கள் அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பையுடன் நூலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது நூலக ஊழியர் தடுத்துவிட்டாராம்.
"இதில் ஆவணங்கள் பல இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் சோதித்துவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கலாமே" என்றார் வாசகர்.
இதற்கு அந்த ஊழியர் சம்மதிக்காததால் "இந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய பிளாஸ்டிக் பொதியை பாதுகாப்பாக வைத்துவிட்டு உள்ளே செல்ல ஏதாவது இங்கு வசதி இருக்கிறதா" என்று அவர் கேட்டபோது, நூலக ஊழியர் கையை விரித்துவிட்டாராம்.
கேந்திரமான இடத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் செய்திப் பத்திரிகைகள் மற்றும் நூல்களை வாசிக்க ஏராளமானோர் தினசரி வருவதுண்டு. இவர்கள் தங்கள் வசமுள்ள பொருட்களை வீதியில் வைத்துவிட்டா உள்ளே புகவேண்டும்? என்று வினவுகிறார் அந்த வாசகர்.
மாநகரசபை நிருவாகம் இதை கவனத்தில் எடுத்து ஆவன செய்யவேண்டும்.