* நவீன் திஸாநாயக்கா குற்றச்சாட்டு
ரொஷான் நாகலிங்கம்
கிழக்கு மாகாணசபை தேர்தலில் யானைச் சின்னத்தை ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூலிக்கு விட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக முன்னணி நேற்று செவ்வாய்க்கிழமை அதன் கிருலப்பனையிலுள்ள தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் தேர்தல் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அதனைப் பொறுக்க முடியாமல் கூட்டமைப்பு கள்ள வாக்குப் போடவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இத்தேர்தலானது சகல தேர்தல் விதி முறைக்கு ஏற்ப இடம்பெறவுள்ளதால் கள்ள வாக்குகள் போடுவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் இல்லாத நிலையில் தனது தோல்விக்கான காரணத்தை இப்போதே ஐ.தே.க.கூறிவருகிறன்றது.
இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தை அதன் தலைவர் கூலிக்கு விட்டுள்ளார். இந்நிலையில் அதன் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சேறு பூசுவதற்காக பொய்யான தகவலை கூறிவருகின்றார். இதில் எந்த உண்மையுமில்லையென்றார்.