கல்முனை வலய மாணவர்கள் கடந்தாண்டை விட இவ்வருடம் (2008) க.பொ.த.சாதாரணதர பெறுபேற்று மட்டத்தில் 15 வீத அடைவை கூடுதலாகப் பெற்றுள்ளனர்.
திட்டமிடப்பட்ட கண்காணிப்பு, வலய ஆளணியினர், அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியனவே இதற்கான காரணமென வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
வலயத்தில் காணப்படும் எழுத்தறிவின்மையை போக்குவதே இன்னும் அடைவு மட்டத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க காரணமாகுமென பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜரீஸ் கருத்து தெரிவித்தார்.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் சாதனை படைத்த சந்திரசேகரன் ஷாலினியின் புகழ் தொடரவேண்டுமெனவும் இன்னும் பல மாணவர்கள் இவ்வருடம் சாதனை புரியவேண்டுமெனவும் வாழ்த்துக் கூறினார் பிரதிக் கல்விப்பணிப்பாளர்.