இலங்கையிலிருந்து லெபனானிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதற்கு நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்நாட்டு மோதல் காரணமாக பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சுமுக நிலை ஏற்பட்டு விமான நிலையம் இயங்கும் பட்சத்தில் அங்கு பணிக்குச் செல்பவர்களிற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும்.
அத்துடன் லெபனானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் அங்கு நடைபெறும் உள்நாட்டு மோதல்களில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையென்று வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.கே.ருகுணுகே தெரிவித்தார்.
லெபனானில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.