Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
[10 - May - 2008] [Font Size - A - A - A]
* ஐ.ம.சு.மு. நம்பிக்கை

டிட்டோகுகன்

தமிழ், சிங்களம், முஸ்லிம்களான மூவின மக்களும் சமமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் இன்று சனிக் கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் தெளிவான வெற்றியை மக்கள் பெற்றுத்தருவார்களென நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இதன் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின், வடக்குக் கிழக்கு இணைந்த தனித் தமிழீழக் கனவு தகர்த்தெறியப்படப் போவதாவும் சுட்டிக்காட்டியுள்ளது. கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக கொழும்பிலுள்ள மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன.

அமைச்சர் பிரேமஜயந்த இதன்போது பேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில்;

`எமது கட்சியைப் பொறுத்தவரை நாம் சக்திமிக்கதும், பயன்தரக்கூடியதுமான பிரசார நடவடிக்கைகளை நடத்தி முடித்திருக்கிறோம். சுதந்திர முன்னணி சார்பில் 18 முஸ்லிம் வேட்பாளர்களும், 15 தமிழ் வேட்பாளர்களும், 11 சிங்கள வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களிடையே எந்த முரண்பாடும் கிடையாது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் சரிசமமாக வாழ்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையிலும், வடக்கு - கிழக்கு மீள இணைக்க எதிரானவர்கள் என்பதன் அடிப்படையிலும் அம்மக்கள் எமக்கு வெற்றியை ஈட்டித் தருவார்களென நாம் நம்புகின்றோம்" என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

இதேநேரம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு பேசுகையில்;

"கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் மூலம் நாட்டைப் புதிய வழியில் இட்டுச் செல்லப் பார்க்கின்றோம். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வுக்கு இதுவொரு முக்கிய சக்தி ஸ்தானமாகும்" என்றார்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க

இதேநேரம், சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை மக்கள் தங்களுக்கு அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் முதலமைச்சராக சிங்கள வேட்பாளரையோ அல்லது தமிழ் வேட்பாளரையோ அல்லது முஸ்லிம் வேட்பாளரையோ தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுசெய்ய முடியுமென்றும், எனினும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் முஸ்லிம் ஒருவருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும

அமைச்சர் டலஸ் அழகப்பெரும இங்கு பேசுகையில்;

"ஐ.தே.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், மீண்டும் கிழக்கை வடக்குடன் இணைத்து அதைப் பிரபாகரனின் பிடிக்குள் தாரை வார்த்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதை கிழக்கில் சுதந்திரத்தை விரும்பும், சிரிக்க விரும்பும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது எமது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமையும்.

கிழக்கு மகாணசபைக்கான இந்தத் தேர்தலானது வரலாற்றில் தமிழ் பேசும் மக்களை அரசியல் பங்காளிகளாக்கிக் கொண்ட முதல் சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த எவரும் இதைச் செய்யவில்லை.

அத்துடன், ஐ.தே.க.வில் சரியான தமிழ்த் தலைமைத்துவம் இல்லை. எனவே, தமிழ் மக்கள் ஐ.தே.க.வின் பக்கம் திரும்ப எந்தக் காரணிகளும் இல்லை. அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமினது செயற்பாடுகளும் முழுப் பொய்யென்பதையும் கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றனர்.

பிரபாகரனுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொண்டது ரணில் விக்கிரமசிங்கவும், ரவூப் ஹக்கீமும் மட்டுமே. அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமானும், பெ.சந்திரசேகரனும் சந்தித்திருந்தாலுமே கூட அவர்கள் ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை. எனவே, கிழக்கைப் பாதுகாக்க இந்த எதிரிகளின் கூட்டணியைத் தோற்கடிக்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தலின் மூலம் பிரபாகரனின் தமிழீழக் கனவு தகர்த்தெறியப்பட்டுள்ளது. சில மணித்தியாலங்களின் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டச் செயலகங்களிலிருந்து வெளிவரும் தேர்தல் முடிவுகளின் மூலம் பிரபாகரனின் தமிழீழக் கனவு பொய் என்பது புலப்படும். எனவே பிரபாகரன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டுமெனில் பிள்ளையானைப் பின்பற்றவேண்டும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை இனமோதலுக்கு போர் மூலம் தீர்வு இல்லை
நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
தேர்தல் கண்காணிப்பு குழுவில் அரசதரப்பினரின் பிரசன்னத்துக்கு ஹக்கீம் கடும் ஆட்சேபனை
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
சமூக சேவையாளர் சுட்டுக் கொலை
கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை பராமரிக்க 36 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவை
அடம்பனை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
தாதியர் தொழிற்சங்க போராட்டத்தால் மேலும் 3 குழந்தைகள் மரணம்
படையினரின் தாக்குதலைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு
திருமலை மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறும் சாத்தியம்
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலி
தேர்தலுக்கு பின்னரும் அனைவருக்கும் மதிப்பளியுங்கள் ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்
அடியார்களின் தேவைகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் அனுமதி
காவத்தையில் 250 பேர் சிக்குன்குன்யாவால் பாதிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்கு 28 ஆயிரம் பொலிஸார் விசேடமாக நியமிப்பு
நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்
சபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தத்தையடுத்து நகைச்சுவையான விடயங்களை கூறுகின்றார் ரணில்
அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை
கிழக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
அரசும் முப்படையினரும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு மோசடி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கிழக்கு வாக்காளரிடம் ஜே.வி.பி. வேண்டுகோள்
லெபனானிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கையர்களுக்கு தற்காலிகத் தடை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் இருநாள் விசாரணைகளின் பின்னர் விடுதலை
புத்தளம், மட்டக்குளியில் இரு தமிழர் கடத்தல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறையீடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையுடனேயே ரணில் செயற்படுகின்றார்
பஸ்ஸில் தமிழ் இளைஞர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளியில் ஒருவர் கைது
கொட்டகலைப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
சகல மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை ஐ.தே.க.உருவாக்கும்
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கான ஊடகவியலாளர் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
கல்முனை வலய மாணவர்கள் கல்வித்தரத்தில் சிறந்த பெறுபேறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன உரும்பிராய் இளைஞர்
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க எமக்கு வாக்களியுங்கள்
சர்வதேச வலைப்பின்னலினூடாக ஆங்கில பாட கற்கை நெறி ஆரம்பம்
கிழக்கில் யானையை கூலிக்கு விட்டுள்ளார் ஐ.தே.க.தலைவர்
மாகாண சபை தேர்தல் முடிவுகளே கிழக்கின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மக்கள் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை வங்கி முடிவு
`மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு திறமையே மூலதனமென எண்ணிச் செயற்பட வேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com