* உயர் நீதிமன்றம் தெரிவிப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பென உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆயுதக் குழுக்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்வதைத் தடைசெய்யவேண்டுமென தாக்கல் செய்த மனுமீதான விசாரணைகளைத் தொடர்ந்தே உயர்நீதிமன்றம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணி சிரால் ரந்திலகவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில் தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிள்ளையான் குழுவினர் வன்முறையிலீடுபடுவதாக மனுதாரரின் சட்டத்தரணி விசாரணைகளின்போது தெரிவித்தார்.
இம்மனுஒன்றின் பிரதியை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.