மூதூர் படுகொலை தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் இராஜதந்திரிகள் சந்தித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இந்த ஆணைக் குழுவின் விசாரணைகள் திடீரென வழமையை விட இரு மணி நேரம் முன்னதாக முடிவடைந்தது.
இதையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ரொபேட் பிளேக் மற்றும் கனேடிய தூதரக சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இராஜதந்திரிகள் குழுவொன்று சந்தித்துள்ளது.
தற்போது நடைபெறும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் சாட்சியங்களின் பாதுகாப்பு குறித்தும் இதன் போது இராஜதந்திரிகள் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினிக்கு எதிரான அமைப்பைச் (ஏ.சி.எவ்) சேர்ந்த 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளில் இதுவரை இந்த ஆணைக் குழு முன் 10 இற்கும் மேற்பட்டோர் சாட்சியமளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.