கிழக்கு மாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி இன்று (10 ஆம் திகதி) இடம்பெறுவதோடு தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரு தசாப்தங்களாக யுத்த மேகம் சூழ்ந்திருந்த கிழக்கு மாகாண மக்கள் சமாதான ஒளிக்கீற்று வீசி இயல்பு நிலை திரும்பியுள்ள சூழலில் பெறுமதிமிக்க வாக்கை வழங்குகின்றனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு மாலை முடிவடையவுள்ளது. 37 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள இத்தேர்தலில் 1342 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேலும் 4 மணி நேர விசேட லீவும் வாக்களிக்கும் அரச தனியார் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பப்ரல், கொபே ஆகிய உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் 18 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அவதானிப்பில் ஈடுபடவுள்ளனர்.
28 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைக்கென நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தலுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இத்தேர்தலில் இற்றைவரை 74 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகள் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மூடப்படட்டுள்ளதுடன், 17 ஆம் திகதி சனிக்கிழமை இதற்கான பதில் பாடசாலை இடம்பெற வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதோர் அடையாள அட்டையை தபால் கத்தோரில் சமர்ப்பித்து அதனைப் பெறமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1072 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 10 மணிக்குப் பின்பும் ஏனைய முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்பும் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருந்தும் இத்தேர்தலை ஒருமும்முனைப் போட்டித் தேர்தலென அவதானிகள் கருதுகின்றனர்.
வெளி மாவட்டத்திலிருந்தும் 778 தேர்தல் அதிகாரிகள் தேர்தல் கடமைக்கென நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கெண்ணும் நிலையங்களின் தொகை 79 ஆகும். மூன்று மாவட்டங்களிலும் 9,82,721 வாக்காளர் வாக்களிக்கின்றனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1072