காவத்தை பொதுவைத்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சிக்குன்குன்யாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார காரியாலய வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
காவத்தை, எந்தானை, மடலகம, ஜனபதய, ஹவுப்பே ஆகிய பிரதேசங்களிலும், தோட்ட மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களின் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு வருவதுடன் இந்நோய் சம்பந்தமான அறிகுறிகள் அடங்கிய சுவரொட்டிகள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அதேவேளை காவத்தைப் பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர்களால் அறிவுறுத்தல் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் நுளம்புகள் பரவாதபடி வீட்டையும், சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.