|
திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதற்கென நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வரும் அடியார்களின் போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை தடையின்றி நிறைவேற்றுவதற்கும், விரதம் அனுஷ்டிப்பவர்கள் தங்குவதற்கும் பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளதாக திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், திருவிழாவுக்கு வருகைதரும் அடியார்களின் உணவுத் தேவையையும் தாகசாந்தியையும் நிறைவேற்றுவதற்கு மகா சிவராத்திரி மட பரிபாலனசபை, சிவபூமி அன்னதான சபை, திருவாசகமடம் ஆகியவை இணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் திருப்பணிச்சபை மேலும் தெரிவித்துள்ளது. |