புத்தளத்தில் நவரட்ணம் பாலச்சந்திரன் (38 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை வியாழக்கிழமை பகல் இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை-கட்டுவனைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து புத்தளம் சோல்ற் முகாமில் வசித்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் வெளியே சென்றவேளை வானில் வந்தவர்கள் இவரைக் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.