* வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
இத்தினபுரி வைத்தியசாலையில் தாதியர் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையின் போது மேலும் 3 குழந்தைகள் பலியானதாக சுகாதார, போஷாக்கு அமைச்சின் பேச்சாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுமாரிகளை தாதியர் பூட்டி விட்டு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இந்த மரணங்கள் சம்பவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மூவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.