யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சமூக சேவையாளரும் தமிழ் உணர்வாளருமான ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி முடமாவடிப் பகுதியிலுள்ள `பூங்கனிச்சோலை' யின் உரிமையாளரே நேற்றிரவு 7 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வீட்டினுள்ளிருந்து இவர் வெளியே வந்து வாசலில் நின்ற போதே அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவரைச் சுட்டுக் கொன்று விட்டுச் சென்றுள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பக்த குணசீலன் (47 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவரது உடல் நேற்றிரவும் அவ்விடத்திலேயே இருந்தது.