Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
[10 - May - 2008] [Font Size - A - A - A]
கிழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சனிக்கிழமை இடம்பெறும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு முன்னொரு போதுமில்லாத அளவுக்கு படையினரும் பொலிஸாரும் சகல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

வடக்கில் மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள், உயிர், உடமை இழப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கவலைகள், அதிருப்தி நிலைமையை இந்தத் தேர்தலில் பெறும் வெற்றியானது நீக்கிவிடுமென்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் காத்திருப்பதாக தென்படுகிறது.

ஆனால், கிழக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற கட்சியாக விளங்கும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க. நீதி, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் வாக்கு மோசடி அதிகளவில் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் எச்சரித்து வருகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்போதும் ஆயுதங்களுடன் இருப்பதாகவும் அவர்கள் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கக் கூடுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை கைப்பற்றிய பின் மேற்கொள்ளப்படவுள்ள உள்சார் கட்டமைப்பு தொடக்கம் கல்வித்துறை வரையிலான அபிவிருத்தித் திட்டங்களை மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் நிறைவேற்ற முடியுமென அறிவித்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது, இதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியுமென கருதுகிறது. அத்துடன், வடக்கில் அரசு மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் உற்சாகமான அங்கீகாரம் தென்னிலங்கையிலிருந்து கிடைக்குமென அரசு எதிர்பார்ப்பதாகவும் தோன்றுகிறது.

ஆனால், கிழக்கை கைப்பற்ற 1 1/2 வருட காலம் இடம்பெற்ற மோதலில் உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான ஆதரவு தமக்கு கிடைக்குமென எதிரணி கருதுகிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள், முஸ்லிம்கள் 80 சதவீதமாகவும் சிங்களவர்கள் 20 சதவீதமாகவும் உள்ள நிலையில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாகாணத்திலுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆயினும், ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த வருட யுத்த செலவினத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், உணவுப் பொருள்விலை அதிகரிப்பாலும் பணவீக்க உயர்வாலும் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தத் தேர்தல் அரசியல் ரீதியில் மிக அதிகளவுக்கு உணர்வுமயப்பட்டதாகக் காணப்படுகிறது.

1,022 தேர்தல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 5 பொலிஸார் காவல் கடமையிலீடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் 500 மீற்றர் தூரத்திலும் இராணுவம், கடற்படை, விமானப்படையினரென முப்படையினரும் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய தேர்தலில் 1,022 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தம் 35 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 10 தேர்தல் தொகுதிகளில் இத்தேர்தல் நடைபெறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகியனவும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகியனவும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகியனவும் அந்தத் தேர்தல் தொகுதிகளாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதனைவிட கூடுதல் வாக்குப் பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனங்களும் கிடைக்கும்.

கல்குடாத் தொகுதியில் 94 ஆயிரத்து 359 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் 1 இலட்சத்து 54 ஆயிரத்து 761 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 81 ஆயிரத்து 830 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அம்பாறைத் தொகுதியில் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 170 பேரும் சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து 69 ஆயிரத்து 57 பேரும் கல்முனைத் தொகுதியிலிருந்து 64 ஆயிரத்து 316 பேரும் பொத்துவில் தொகுதியிலிருந்து 1 இலட்சத்து 33 ஆயிரத்து 765 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அவ்வாறே திருகோணமலைத் தொகுதியில் 91 ஆயிரத்து 598 பேரும் மூதூர் தொகுதியிலிருந்து 84 ஆயிரத்து 175 பேரும் சேருவில தொகுதியிலிருந்து 66,690 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களின் விபரம் வருமாறு: கல்குடா- 91, மட்டக்களப்பு- 137, பட்டிருப்பு- 86, அம்பாறை- 153, சம்மாந்துறை- 77, கல்முனை- 60, பொத்துவில்- 140, சேருவில- 87, திருகோணமலை- 97, மூதூர்- 94.

Email this page Your Opinion Print this page
இலங்கை இனமோதலுக்கு போர் மூலம் தீர்வு இல்லை
நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
தேர்தல் கண்காணிப்பு குழுவில் அரசதரப்பினரின் பிரசன்னத்துக்கு ஹக்கீம் கடும் ஆட்சேபனை
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
சமூக சேவையாளர் சுட்டுக் கொலை
கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை பராமரிக்க 36 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவை
அடம்பனை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
தாதியர் தொழிற்சங்க போராட்டத்தால் மேலும் 3 குழந்தைகள் மரணம்
படையினரின் தாக்குதலைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு
திருமலை மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறும் சாத்தியம்
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலி
தேர்தலுக்கு பின்னரும் அனைவருக்கும் மதிப்பளியுங்கள் ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்
அடியார்களின் தேவைகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் அனுமதி
காவத்தையில் 250 பேர் சிக்குன்குன்யாவால் பாதிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்கு 28 ஆயிரம் பொலிஸார் விசேடமாக நியமிப்பு
நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்
சபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தத்தையடுத்து நகைச்சுவையான விடயங்களை கூறுகின்றார் ரணில்
அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை
கிழக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
அரசும் முப்படையினரும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு மோசடி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கிழக்கு வாக்காளரிடம் ஜே.வி.பி. வேண்டுகோள்
லெபனானிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கையர்களுக்கு தற்காலிகத் தடை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் இருநாள் விசாரணைகளின் பின்னர் விடுதலை
புத்தளம், மட்டக்குளியில் இரு தமிழர் கடத்தல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறையீடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையுடனேயே ரணில் செயற்படுகின்றார்
பஸ்ஸில் தமிழ் இளைஞர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளியில் ஒருவர் கைது
கொட்டகலைப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
சகல மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை ஐ.தே.க.உருவாக்கும்
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கான ஊடகவியலாளர் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
கல்முனை வலய மாணவர்கள் கல்வித்தரத்தில் சிறந்த பெறுபேறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன உரும்பிராய் இளைஞர்
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க எமக்கு வாக்களியுங்கள்
சர்வதேச வலைப்பின்னலினூடாக ஆங்கில பாட கற்கை நெறி ஆரம்பம்
கிழக்கில் யானையை கூலிக்கு விட்டுள்ளார் ஐ.தே.க.தலைவர்
மாகாண சபை தேர்தல் முடிவுகளே கிழக்கின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மக்கள் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை வங்கி முடிவு
`மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு திறமையே மூலதனமென எண்ணிச் செயற்பட வேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com