அம்பாறை பதியதலாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட உணகஸ்லந்த எல்ல வீடமைப்புத் திட்டம் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பினால் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஜனசெவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்ததன் பின்னர் வீட்டுக்குரியவர்கள் வாழ்ந்து வந்த குடிசைகளையும் புதிய வீடமைப்புத் திட்டத்தையும் அமைச்சர் பார்வையிடுவதை காணலாம்.
இன்று இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகளும் ஆவணங்களும் வாகனங்களில் ஏற்றப்படுவதை இங்கு காணலாம்.