Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
சொந்த மண்ணில் அசத்தியது கங்குலி அணி கடைசி ஓவரில் வாய்ப்பை இழந்த டிராவிட் அணி
[10 - May - 2008] [Font Size - A - A - A]
சொந்த மண்ணில் அசத்தியது கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணி. நேற்று முன்தினம் விறுவிறுப்பான ஐ.பி.எல். லீக் போட்டியில், டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசிக் கட்டத்தில் துடுப்பாட்டத்தில் சொதப்பிய டிராவிட் அணி இன்னொரு முறை கைக்கு எட்டிய வாய்ப்பை கோட்டை விட்டது.

மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. கொல்கத்தா அணியில் அக்தர் இடம்பெறவில்லை. நாணயச் சுழற்யில் வென்ற கங்குலி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

கொல்கட்டா அணி தொடக்கத்தில் தடுமாறியது. பின்னர் கங்குலி, டேவிட் ஹசி இணைந்து கலக்கினர். இந்த நேரத்தில் ஒயிட் துல்லியமாக `த்ரோ' செய்ய கங்குலி (20) ரன் அவுட்டானார். கும்பிளே வீசிய 9 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் அடித்த ஹசியும் 26 ஓட்டங்களுக்கு ரன் அவுட்டாக சிக்கல் ஏற்பட்டது.

கடைசிக் கட்டத்தில் சாகா, முரளி கார்த்திக் கைகொடுத்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்கள் எடுத்தது.

இலகுவான இலக்கை விரட்டிய பெங்களூர் அணி தொடக்கத்தில் திணறியது. சந்தர்போல் (7), அருண்குமார் (22) விரைவாக நடையை கட்டினர். அடுத்து வந்த கப்டன் டிராவிட் (5), கங்குலி பந்துவீச்சில் பரிதாபமாக போல்டானார். ஒயிட் 30 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இஷாந்த் சர்மா கட்டுக் கோப்பாக பந்து வீசினார். பவுச்சர், பிரவீண் தலா ஒரு பவுண்டரி அடித்த போதும் தேவையான ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. 16 ஓவரில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

Email this page Your Opinion Print this page
கடைசி ஓவரை மாலிக்கிடம் பந்துவீசக் கொடுத்தது ஏனென்று ஷேவாக் விளக்கம்
ஐ.சி.சி. கிரிக்கெட் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் கவாஸ்கர்
கடைசிப் பந்து வரை பெரும் பரபரப்பு 4 விக்கெட்டுகளால் சென்னை வெற்றி
சென்னை - டெல்லி போட்டியின் சில முக்கிய அம்சங்கள்
சொந்த மண்ணில் அசத்தியது கங்குலி அணி கடைசி ஓவரில் வாய்ப்பை இழந்த டிராவிட் அணி
நடுவர்களின் தீர்ப்பு திறம்பட இருப்பதற்கு சில புதிய முறைகள் அமுலுக்கு வரும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com