சென்னையுடனான போட்டியில் கடைசி ஓவரை வீச மாலிக்குக்கு கொடுத்தது ஏன்? என்று டில்லி அணிக் கப்டன் ஷேவாக் விளக்கமளித்துள்ளார்.
இந்தத் தோல்வி குறித்து டில்லி அணிக் கப்டன் ஷேவாக் கூறியதாவது;
`கடைசி ஓவரை நான் வீசுவதா அல்லது சொயிப் மாலிக்குக்கு கொடுப்பதா? என்பது குறித்து அணி வீரர்களிடம் ஆலோசனை நடத்தினேன். என்னை விட மாலிக் சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்ததால் கடைசி ஓவர் வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்று எதுவும் நடக்கலாம்.
187 ஓட்டங்கள் என்பது குறைவான ஓட்டம் கிடையாது. கம்பீர், தவானின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதேபோல் மகேஷ், சங்க்வான் பந்துவீச்சுப் பணியை சிறப்பாகச் செய்திருந்தனர். 15 ஆவது ஓவர் வரை எங்களது திட்டம் சரியாகத்தான் இருந்தது. இறுதியில் கடைசி ஓவரில் தோற்றுவிட்டோம்.
5 ஆவது பந்துவீச்சாளர் இருந்திருந்தால் நாங்கள் 30 முதல் 40 ஓட்டங்களை தடுத்திருக்கலாம். ஆனால், எங்களிடம் 5 ஆவது பந்து வீச்சாளர் இல்லை. அடுத்த ஆட்டத்தில் சிறப்பு சுழற்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்படுவார்' என்றார்.
சென்னை அதிரடி வீரர் மோர்கல் கூறுகையில்;
`20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் 15 முதல் 20 ஓட்டங்கள் எடுப்பது கடினம் கிடையாது. கோனி சிறப்பாக ஆடினார். கடந்த ஆட்டத்தில் 2 சிக்சர் அடித்திருந்தார். இதனால், நாங்கள் வெற்றி பெறுவோமென்று நினைத்தேன். அதன்படியே நடந்தது' என்றார்.