Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்க வேலைத் திட்டம்
[11 - May - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதியின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படும் புதிய திட்டம்.

சி.நித்தியானந்தன்

இலங்கையில் தற்போது நிலவும் அமைதியற்ற நிலைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கு வாழும் தமிழர்களுக்கு சமாதான வாழ்வு உதயமாக அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியே இலங்கையின் மூத்த சகோதரர் என்ற ரீதியில் தமிழகம் சமீபத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறு இந்தியாவின் ஆங்கில பிரபல அமைப்பான world organisation for esearch in leadership and development rust என்ற ஆங்கில மொழி ஆற்றலை வளர்க்கும் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் பிரபல இந்தியப் பத்திரிகையின் ஆலோசகருமான ஏ.விஜேகுமார் தெரிவித்தார்.

சமாதான நட்புள்ள அமைதி உள்ள நாடாக தன்னை அடுத்துள்ள நாடு இருக்க வேண்டும் என்று இந்தியா கருதுகின்றது. அத்தோடு பூகோள ரீதியாகவும் இந்தியா இலங்கையை நோக்குகின்றது. இதன் வெளிப்பாடே தமிழகத்தில் இந்தத் தீர்மானம் என்றும் அவர் சொன்னார். மீண்டும் வகுப்புவாத பிரச்சினை, மொழிப் பிரச்சினை ஏற்பட்டு நாடு முடங்கிப் போகக்கூடாது. சமாதானத்தின் மூலமாகவே ஒட்டு மொத்தமாக தேசத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்றார்.

ஆங்கில மொழி ஆற்றலை நாட்டுமக்கள் மத்தியில் அதிகரிப்பதற்காக ஜனாதிபதியினால் திட்டமிடப்பட்ட "the enhancement of job oriented english languge skills in the country' ( (தொழில் திசை முகப்படுத்தியை ஆங்கில மொழித்திறன்களை நாட்டில் அபிவிருத்திச் செய்வதற்கான திட்டம்) என்ற வேலைத்திட்டம் கடந்த வாரம் ஹோட்டல் கலதாரியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கையில் தமது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காக வந்திருந்த இந்திய நிறுவனங்களில் ஒன்றான மேற்படி வோல்ட் ட்டிரஸ்ட் ஸ்தாபகர் தினக்குரல் வாரவெளியீட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் இன்று இடம்பெறும் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டு விசேடமாக அபிவிருத்தியைக் காணவிரும்பும் இலங்கை, மூன்றாம் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய கல்வி சம்பந்தமான விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, ஆங்கில மொழி சம்பந்தமாக அதாவது "english a life skill' ன்ற வேலைத்திட்டம் மிக அற்புதமானது. சமூகங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வை நீக்கி, வறுமையை அகற்றி பொருளாதார ரீதியில் நாட்டையும் மக்களையும் வளம்பெறச் செய்யக்கூடிய மிக வெற்றிகர செயற்றிட்டமாகவே நாம் கருதுகின்றோம் என்றும் அவர் சொன்னார்.

ஜனாதிபதியின் விசேட செயலணித்திட்டத்தின் கீழ் ஆங்கில அறிவாற்றலை விருத்தி செய்வதற்காக english as a life skill திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக இந்த செயலணியின் ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி ஆலோசகருமான சுனிமல் பெர்ணாண்டோ பின்வருமாறு தினக்குரலுக்கு விளக்கமளித்தார்;

உலகின் உலகமயமாக்கலுக்கு மத்தியில் கல்வியிலும் வர்த்தகத்திலும் உலகளாவிய மொழியாக ஆங்கில மொழி திகழ்கின்றது. உலக நாடுகளுக்கு இடையே கல்விசார் இடம் பெயர்வாற்றையும் (mobility) கடன் மற்றும்(cradit transferability) வசதிகளையும் ஏற்பாடு செய்யும் பொது ஊடகமொன்றாக ஆங்கில மொழி மாறியுள்ளது. அத்தோடு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்ற விடயத்திலும் முக்கிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் அரசாங்கம் முக்கிய தொழில் வழங்குனராக விளங்காது. உலக மயமாக்கலுக்கு உட்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் செயல்படும் தனியார் வேலை கொள்வோரால் எப்பொழுதும் தொழிலுக்கான அடிப்படையாக திறனொன்றாக ஆங்கில மொழி அறிவு வேண்டப்படுகின்றது. வேகமாக மாறிவரும் சந்தை இயக்க ஆற்றல்களுக்கு ஈடாக அரசாங்கத்தின் பொறுப்பை உணர்ந்து ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷ ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தம் பொருட்டு விசேட ஜனாதிபதி செயலணியின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அமைவாக ஆங்கில மொழி அபிவிருத்தி மற்றும் நவீன தொழில் நுட்பத்துறையில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் அயல்நாடான இந்தியாவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமின்றி அந்நாட்டில் இத்துறையில் முன்னணி வகிக்கும் தெரிவு செய்யப்பட்ட 11 நிறுவனங்களுடன் முதலீட்டுச் சபை (boi) ஊடாக கூட்டு வர்த்தக நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமது துணை வர்த்தக பங்காளிகளைக் கண்டறிவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் ஆங்கிலக் கல்வியை போதிக்கும் சுமார் 1600 நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கூட்டு வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு bio திட்டத்தின் கீழ் காணி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலணி தயாராக இருப்பதாகவும் திட்ட ஆலோசகர் இங்கு தெரிவித்தார்.

தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களில் 20 வருடங்களுக்கு மேலாக ஆங்கில அறிவை பாமர மக்களிடையே அபிவிருத்தி செய்வதிலும் கல்லூரி சமுதாய மேம்பாட்டுக்காக W.O.R.L.O.T.R.U.S.T யின் ஸ்தாபகர் விஜேயகுமார் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி: ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதில் வர்த்தக நோக்குடன் இங்கு வந்துள்ளீர்கள். உங்களது பணி வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கட்டுப்பட்டதாக அமைந்துவிடுமா? நீங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டில் போன்றே இங்கும் ஒரு பகுதி யுத்த சூழ்நிலையில் சிக்குண்ட தமிழ் முஸ்லிம் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். மறுபுறத்தில் இந்திய வம்சாவளி மக்கள் மற்றும் கிராமிய மக்கள் போதிய பொருளாதார வளர்ச்சி இன்றி வாழுகின்றனர். இவர்களுக்கு உங்கள் அமைப்பு உதவும் எண்ணம் உண்டா?

பதில்:பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய எமது ஆங்கில ஆற்றல் திறன் வளர்ச்சி வர்த்தக ரீதியாக மேற்கொள்ளப்பட்டாலும் இதன் பயன் வெறுமனே குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இங்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதியுடனும் ஜனாதிபதியின் அதிகாரிகளுடனும் நாம் விரிவாக இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வறுமையில் வாடும் தமிழ், சிங்கள, முஸ்லிம், இந்திய, மலையக மக்கள் அனைவருக்கும் இதன் உண்மையான பயன் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த இலக்கை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

ஆங்கில மொழித் திறன் மாத்திரமல்ல, தனி மனித வளர்ச்சி, சிந்தனை முழு மனித வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி உள்ளிட்ட விடயங்களில் எமது அமைப்பும் எமது நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டுள்ளது. வருடத்தில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் எமது அமைப்பு மூலம் பயனடைந்து வருகின்றனர். பயிற்சிகளை முடிப்போர் கிட்டத்தட்ட 40 சதவீதமானோர் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆங்கிலம் பேசுவது தனிமனித வளர்ச்சிக்கும் முழுமனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்பதனை அனுபவ ரீதியாகக் கண்டுள்ளோம். அரசாங்கப் பணவுதவி இல்லை. அறக்கட்டளை இல்லை. வெளிநாட்டு நிதி உதவி எமக்கு இல்லை. மக்கள் சக்தியைக் கொண்டு சுய முயற்சியின் மூலம் நாம் இந்தப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். எமது அமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட கேம்பிரிச் பல்கலைக்கழகம் சமூக பொது பணித்திட்டம் ஒன்றை எம்மிடம் ஒப்படைத்தது. நாம் இதனை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

கேள்வி: இவ்வாறான சமூகப் பொதுப் பணியில் எவ்வாறு உங்களை ஈடுபடுத்திக் கொண்டீர்கள்.

பதில்: 19 வயதிலேயே சாரணருக்கான ஜனாதிபதி விருதை நான் பெற்றேன். இது சமூகப் பணிக்காகக் கிடைத்த உயர் விருது. எனது இளம் பருவத்திலேயே இவ்வாறான சமூகப் பணிகளில் ஈடுபாடு இருந்தது. டாட்டா கம்பனியில் வர்த்தகப் பிரிவிலும் கடமையாற்றியுள்ளேன். பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்ட பின்பு இந்த சமூகப் பணியையும் தொடர ஆரம்பித்தேன்.

கேள்வி: ஒருவரது தாய் மொழி மூலம் முன்னேற்றம் காண முடியாதா? சமுதாயம் வளர்ச்சி அடைய முடியாதா? ஆங்கில மோகம் தமிழகத்தை விழுங்கி விடும் என்பதில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: தாய் மொழிதான் தனிப்பட்ட ஒருவருக்கும் சமுதாயத்துக்கும் முக்கியமானது. அதன் மூலம் வளர்ச்சி அடைய முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழ்த் தாய் மொழியை விடுத்து ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்பது அல்ல எமது நிலைப்பாடு. ஆங்கில மொழித்திறனை பெறுவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வருவதற்கு தராளமாக சந்தர்ப்பம் உண்டு. வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகள் தாரளாமாக உண்டு. இவ்வாறான நாடுகளில் வயோதிபர்கள் அதிகம். இந்தத் தொழில்வாய்ப்புகளை நாம் பெற்றுக் கொள்வதாயின் ஆங்கில அறிவு அவசியம். இந்த ஆற்றல் இருக்குமாயின் நிர்வாக மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இளைஞர்களுக்கு உண்டு. ஆங்கிலத்தில் பட்டம் பெற வேண்டுமென்பதல்ல. தாய் மொழியோடு ஆங்கில மொழியில் நிர்வாகம் சம்பந்தமான ஆற்றலை பெற்றுக் கொள்வதற்கு ஆக நூறு மணித்தியாலங்களை செலவிட்டால் போதுமானது. இதற்கேற்ற ஆங்கில மொழியாற்றலுக்கான பயிற்சித் திட்டங்களை இந்தியாவில் நடத்திவருகின்றோம்.

பொருளாதார தனி மனித வளர்ச்சிக்கான இந்த ஆங்கில ஆற்றல் சம்பந்தமான விடயத்தில் இந்தியா சமீபத்தில் தான் கவனம் செலுத்தியது. இதன் காரணமாகத் தான் இன்று எமது நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் மூலமான வளர்ச்சி பாரிய அளவில் இடம்பெற்று வருகின்றது. கார் தயாரிப்பை மேற்கொள்வதற்கான தொழிற்சாலையை அமைக்க கோடிக்கணக்கான ரூபா தேவை. ஆனால் கணினியைக் கொண்டும் பெரிய வருமானத்தை தேடிக் கொள்ள முடியம். இதற்கு ஆங்கிலப் பட்டப் படிப்பும் தேவையில்லை. கணினியை கையாளுவதற்கான அறிவும் ஆங்கிலத்தில் டைப் செய்யக்கூடிய திறனும் இருந்தால் இருந்த இடத்திலிருந்தே தொழில் செய்ய முடியும். எமது நாட்டில் வெளிநாடுகளில் உள்ள பத்திரிகையில் வெளிவரும் ஆக்கங்களை இளைஞர்கள் டைப் செய்வது Digital Clipping முதலானவற்றின் மூலம் வருவாயை பெறுகின்றனர். இத்துறையில் பணியாற்றுவதற்கு பலர் தேவைப்படுகின்றனர். இங்குள்ள படித்த இளம் சமூகத்தினர் இந்த ஆற்றலைப் பெற்றால் நாமே இவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிவிடுவோம்.

ஜனாதிபதியின் இந்த உத்தேச திட்ட நடவடிக்கையில் 50 ஆயிரம் பேருக்கு தொழில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவர்களுடன் 10 ஆயிரம் பேரை நாம் உருவாக்கிவிட முடியம். BPO என்ற கணினி மூலமான தொழில் நடவடிக்கையில் இளைஞர்கள் தொழில் வாய்பைப் பெறுவதுடன், மேலதிக வருமானத்தையும் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் உண்டு.

கேள்வி: ஆங்கில அறிவாற்றலை வர்த்தக நோக்கில் விரிவு படுத்தும் நோக்கில் உங்களது நிறுவனத்திற்கு பங்காளியை தேடிக் கொள்வதற்காக வந்திருக்கும் நீங்கள், ஒரு புறத்தில் யுத்தத்தால் வாடும் தமிழ், முஸ்லிம், கிராம சிங்கள மக்களுக்கும் வறுமையினாலும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மலையக மக்களுக்கும் மனித மேம்பாட்டு அறிவாற்றலை எவ்வாறு வழங்குவீர்கள்?

பதில்: மனித வள மேம்பாடு விடயத்தில் எமக்கும் போதிய அறிவு, அனுபவம் உண்டு. தமிழகத்தில் மாத்திரம் ஒரு கோடிக்கு மேற்பட்ட பாமர மக்கள் சுயதொழில் வாய்ப்புகளில் ஈடுப்பட்டு தம்மை வளமாக்கிக் கொள்ள நாம் வழி செய்துள்ளோம். இந்த நடைமுறைகளையும் அனுபவங்களையும் கொண்டு இங்குள்ள பாமர மக்களின் வாழ்வை வளமாக்க வழிசெய்வோம்.

எமது நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி முன்னெடுப்தற்கு ஜனாதிபதி செயலகம் உறுதியளித்துள்ளது.

கேள்வி: முதலீட்டு சபையின் கீழான உங்களது வர்த்தக முயற்சிக்கு துணை பங்குகாரர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளாரா?

பதில்: இது தொடர்பில் மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்னும் முடிவாக வில்லை.

கேள்வி: அப்படியாயின் உங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த தற்சமயத்தில் யாரையாவது நியமித்துள்ளீர்களா?

(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்
ஊடகங்களுக்கு எதிராக அரசு தொடுத்துள்ள யுத்தம்!
ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்க வேலைத் திட்டம்
மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?
பாராளுமன்ம் திடீர் ஒத்திவைப்பு பின்னணிக் காரணம் என்ன?
சட்டப் பேரவைத் தீர்மானம்: கலைஞர் சொன்னது என்ன?
இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை
கொசோவோவின் சுதந்திரம் உண்மையான சுதந்திரமா?
போர் நிறுத்தத்தை விரும்பாத தேர்தல் முடிவுகள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com