Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008

Download latha tamil font
 
  Sri Lanka Forecast
 
HOT NEWS
Foreign News
பின்னடைவுகள் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து போட்டியிடுவதென ஹிலாரி உறுதி
[11 - May - 2008] [Font Size - A - A - A]
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தீவிரமாக போராடிவரும் செனட்டர் ஹிலாரி கிளின்டன் கடந்த ஆரம்பகட்ட தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து போட்டியிடுவதென உறுதியெடுத்துள்ளார்.

இவ்வாறு முற்பகுதியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட தேர்தல்களில் இன்டியானாவில் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி வெற்றிபெற்றிருந்த போதும் வட கரோலினாவில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தார்.

மேலும், நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஹிலாரி பிரசார நடவடிக்கைகளுக்காக கடந்த மாதம் 6.4 மில்லியன் டொலர்களை கடன்வாங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஹிலாரி வேட்பாளர் தெரிவு செய்யப்படும் வரை தான் களத்தில் இருக்கப்போவதாக தெரிவித்துள்ள போதும் வேட்பாளர் தெரிவு தொடர்பாக இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருக்கும் ஆகஸ்ட் மாதம் வரை தான் களத்தில் இருப்பாரா என்பது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.

மக்களின் நிதிப் பங்களிப்பின்றி பிரசார நடவடிக்கைகளை தொடர முடியாதென்பதால் இது ஹிலாரிக்கு ஆரோக்கியமான சமிக்ஞை இல்லையென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் களத்தில் தீவிரமாக போட்டியிட்டு வரும் பராக் ஒபாமாவோ அல்லது ஹிலாரியோ எதிர்வரும் ஆகஸ்டுக்குள் 2025 பேராளர்களை பெறாவிடின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான பொறுப்பு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட 800 விசேட பேராளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் விசேட பேராளர்களின் ஆதரவு தமக்குப் பலமாக இருப்பதாக ஹிலாரி தரப்பு கருதுவதுடன் வட கரோலினா தோல்விக்குப் பின்னர் தமது ஆதரவைப் பலப்படுத்தும் நோக்கில் விசேட பேராளர்களை ஹிலாரி சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, 271 விசேட பேராளர்களின் ஆதரவை ஹிலாரியும் 256 பேராளர்களின் ஆதரவை ஒபாமாவும் பெற்றுள்ளனர். 270 பேராளர்கள் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. இந்நிலையில் சில விசேட பேராளர்கள் ஹிலாரியை இப்போட்டிக் களத்திலிருந்து வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பின்னடைவுகள் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து போட்டியிடுவதென ஹிலாரி உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தீவிரமாக போராடிவரும் செனட்டர் ஹிலாரி கிளின்டன் கடந்த ஆரம்பகட்ட தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து போட்டியிடுவதென உறுதியெடுத்துள்ளார்.

இவ்வாறு முற்பகுதியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட தேர்தல்களில் இன்டியானாவில் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி வெற்றிபெற்றிருந்த போதும் வட கரோலினாவில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தார்.

மேலும், நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஹிலாரி பிரசார நடவடிக்கைகளுக்காக கடந்த மாதம் 6.4 மில்லியன் டொலர்களை கடன்வாங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஹிலாரி வேட்பாளர் தெரிவு செய்யப்படும் வரை தான் களத்தில் இருக்கப்போவதாக தெரிவித்துள்ள போதும் வேட்பாளர் தெரிவு தொடர்பாக இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருக்கும் ஆகஸ்ட் மாதம் வரை தான் களத்தில் இருப்பாரா என்பது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.

மக்களின் நிதிப் பங்களிப்பின்றி பிரசார நடவடிக்கைகளை தொடர முடியாதென்பதால் இது ஹிலாரிக்கு ஆரோக்கியமான சமிக்ஞை இல்லையென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் களத்தில் தீவிரமாக போட்டியிட்டு வரும் பராக் ஒபாமாவோ அல்லது ஹிலாரியோ எதிர்வரும் ஆகஸ்டுக்குள் 2025 பேராளர்களை பெறாவிடின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான பொறுப்பு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட 800 விசேட பேராளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் விசேட பேராளர்களின் ஆதரவு தமக்குப் பலமாக இருப்பதாக ஹிலாரி தரப்பு கருதுவதுடன் வட கரோலினா தோல்விக்குப் பின்னர் தமது ஆதரவைப் பலப்படுத்தும் நோக்கில் விசேட பேராளர்களை ஹிலாரி சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, 271 விசேட பேராளர்களின் ஆதரவை ஹிலாரியும் 256 பேராளர்களின் ஆதரவை ஒபாமாவும் பெற்றுள்ளனர். 270 பேராளர்கள் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. இந்நிலையில் சில விசேட பேராளர்கள் ஹிலாரியை இப்போட்டிக் களத்திலிருந்து வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ஹிலாரி துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பளிக்க போவதாக கூறும் ஒபாமா
பிரிட்டனில் மேயராக பதவியேற்கும் இந்தியப் பெண்
அமெரிக்க கோடீஸ்வரரிடமிருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார் இஸ்ரேல் பிரதமர்
மண்டேலா மீதான தடையை அகற்றும் தீர்மானத்திற்கு அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்பு
நேபாளப் பிரதமருடன் மாவோ தலைவர்கள் சந்திப்பு
பின்னடைவுகள் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து போட்டியிடுவதென ஹிலாரி உறுதி
 
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com