வாஷிங்டன்:தென்னாபிரிக்காவில் இனவெறி ஆட்சி இருந்தபோது அதை எதிர்த்து போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளும், பயங்கரவாத இயக்கப்பட்டியலில் அந்த கட்சியின் பெயரும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடர்ந்து நீடிக்கின்றன.
இந்த நிலையில் நெல்சன் மண்டேலாவுக்கும் மற்ற தென்னாபிரிக்காவின் தலைவர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அகற்றுவதற்காக ஒரு தீர்மானம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். செனட் சபையிலும் இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இது நிறைவேறியதும் சட்டமாக்கப்படும்.