வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் வேட்பாளராக தேர்ந்து எடுப்பதற்கான போட்டியில் ஒபாமாவும் ஹிலாரியும் இன்னமும் போட்டியில் இருக்கிறார்கள். ஹிலாரியை விட ஒபாமாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் நான் வெற்றி பெற்றால், துணை ஜனாதிபதியாகப் போட்டியிடும் வேட்பாளராக நான் ஹிலாரியை தேர்ந்தெடுப்பேன் என்று ஒபாமா கூறி இருக்கிறார். அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
துணை ஜனாதிபதியாக இருப்பதற்கு அவர் முழுத் தகுதி படைத்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹிலாரி ஓய்வு இல்லாது உழைக்கக் கூடியவர். புத்திசாலி திறமையானவர் என்றும் குறிப்பிட்டார்.