Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வன்முறை அதிகரிப்பால் வாக்களிக்க மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை
[11 - May - 2008] [Font Size - A - A - A]
*சுட்டிக்காட்டும் சுயாதீன கண்காணிப்பாளர்கள்

நூற்றுக்கணக்கான வன்முறைச் சம்பவங்களுக்கும் முறைகேடுகளுக்கும் மத்தியில் கிழக்கு மக்கள் தேர்தலில் வாக்களிக்க அதிகளவு ஆர்வம் காட்டவில்லையென சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.

அமைச்சர் படையும் ஆயுதக் குழுக்களின் எல்லை மீறிய அடாவடித்தனமுமே மக்களை வாக்களிப்பதிலிருந்து தூரப்படுத்திவிட்டதாக அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டின.

கிழக்கு மாகாண தேர்தல் களத்திலிருந்து சி.எம்.ஈ.வி. அமைப்பின் தேர்தல் பிரிவு அதிகாரி திசாநாயக்கா கூறுகையில்;

"கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு விகிதம் 45 சதவீதமாக காணப்பட்டுள்ளது.அம்பாறையில் 45 சதவீதமும் திருகோணமலை 50, மட்டக்களப்பு 45 என்ற வீதத்தின் அடிப்படையிலும் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

மக்களின் சுயாதீன வாக்குப் பதிவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைச்சர்களும் ஆயுதக்குழுக்களும் விளங்கின. இங்கு மக்கள் வாக்களிப்பிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். இது பாரிய மனித உரிமை மீறலாகு"மென்றார்.

இது பற்றி பஃவ்ரலின் கிங்ஸ்லி ரொட்றிகோ கூறுகையில்;

"கிழக்கு மாகாணத்தில் 45 சதவீத வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளது. திருகோணமலையில் 52 சதவீத வாக்களிப்பும் அம்பாறை-48, மட்டக்களப்பு-40 வீதமென்ற அடிப்படையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

அத்துடன் பல வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுபற்றி பல முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன" என்றார்.

இது பற்றி நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கீர்த்தி தென்னக்கோன் கூறுகையில்;

"தேர்தல் வன்முறை, மோசடிச்சம்பவங்களென 174 முறைப்பாடுகள் எமக்கு நேற்று பிற்பகல் 3.30 மணிவரை கிடைத்துள்ளது. இது நேர்மையற்ற தேர்தலை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

திருக்கோவிலில் பதியப்பட்ட வாக்காளர்களை விட அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமாகும். வாக்களிப்பு மோசடிக்கு இதை உதாரணமாகக் கூறலாம்" என்றார்.

லங்கா தேர்தல் கண்காணிப்பக இணைப்பாளர் கெலும் கூறுகையில்;

"மட்டக்களப்பில் பிள்ளையான் ஆயுதக் குழுவினர் நீதியான தேர்தலுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தனர். 38 சதவீத வாக்களிப்பே கிழக்கில் நடைபெற்றுள்ளது.

வாக்களிப்பு நிலையம் சென்ற வாக்காளர்களின் அட்டைகள் பெருவாரியாக ஆயுதப்பிரிவினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. மோசடிச் சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் குறித்து கவனமெடுக்கப்படவில்லை"யெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
மோசடி இடம்பெற்ற பகுதிகளில் மீள்வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தல்
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதியமைச்சர் பாயிஸ் படையினரால் மீட்பு
கருணா விடயத்தில் பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டது பிரிட்டன்
அம்பாறை பக்கிமிட்டியா, பன்னலகம பகுதி இராணுவ நிலைகள் மீது மோட்டார் தாக்குதல்
தேர்தல் வரலாற்றிலேயே மோசமான முறைகேடுகள் தென்னிலங்கையிலிருந்து கைக்கூலிகளும் வரவழைப்பு
ஜனநாயக உரிமைகளுக்கு வரலாற்றில் மீண்டுமொருதடவை களங்கம் ஏற்பட்டுள்ளது
வீரகெட்டிய பிரதேச சபை உபதலைவர் சுட்டுக்கொலை
அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தேர்தல் களம் செல்ல அனுமதி இல்லை
படையினரின் ஐந்து சடலங்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளால் ஒப்படைப்பு
மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவி வழங்குமாறு வேண்டுகோள்
வன்முறை அதிகரிப்பால் வாக்களிக்க மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை
திருமலை உள்துறைமுக வீதியில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம்
மோசமான வன்முறைகள், பெரும் மோசடிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
வாக்களிப்புக்கு முன்னர் 88 வன்செயல்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்
பெரும் பதற்றத்தின் மத்தியில் மட்டு மாவட்டத்தில் வாக்களிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com