Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவி வழங்குமாறு வேண்டுகோள்
[11 - May - 2008] [Font Size - A - A - A]
மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்துள்ள் 23 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உடனடியாக அவசர உதவிகள் தேவைப்படுவதாக அப்பகுதியிலுள்ள மனிதநேய உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், சில அகதிகள் தற்போது நோய்கள் மற்றும் போதிய ஊட்டச்சத்தின்மையின் காரணமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் இவர்கள் அனைவருக்கும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அவ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூடுதலாக தேவைப்படுவதாகவும் யாழ்.குடாநாட்டுக்கான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதன் காரணமாக ஆகாய மற்றும் கடல் மார்க்கமாகவே மருத்துவ உதவிகளை கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கில் உணவுப் பொருட்களின் விலைகள் மிக உயர்ந்த விலையில் விற்கப்படுவதன் காரணமாக பொதுமக்கள் அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குவதோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Email this page Your Opinion Print this page
திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
மோசடி இடம்பெற்ற பகுதிகளில் மீள்வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தல்
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதியமைச்சர் பாயிஸ் படையினரால் மீட்பு
கருணா விடயத்தில் பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டது பிரிட்டன்
அம்பாறை பக்கிமிட்டியா, பன்னலகம பகுதி இராணுவ நிலைகள் மீது மோட்டார் தாக்குதல்
தேர்தல் வரலாற்றிலேயே மோசமான முறைகேடுகள் தென்னிலங்கையிலிருந்து கைக்கூலிகளும் வரவழைப்பு
ஜனநாயக உரிமைகளுக்கு வரலாற்றில் மீண்டுமொருதடவை களங்கம் ஏற்பட்டுள்ளது
வீரகெட்டிய பிரதேச சபை உபதலைவர் சுட்டுக்கொலை
அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தேர்தல் களம் செல்ல அனுமதி இல்லை
படையினரின் ஐந்து சடலங்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளால் ஒப்படைப்பு
மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவி வழங்குமாறு வேண்டுகோள்
வன்முறை அதிகரிப்பால் வாக்களிக்க மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை
திருமலை உள்துறைமுக வீதியில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம்
மோசமான வன்முறைகள், பெரும் மோசடிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
வாக்களிப்புக்கு முன்னர் 88 வன்செயல்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்
பெரும் பதற்றத்தின் மத்தியில் மட்டு மாவட்டத்தில் வாக்களிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com