மன்னார் கறுக்கய்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட படையினரின் ஏழு சடலங்களில் ஐந்து நேற்று விடுதலைப்புலிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கறுக்காய்குளம் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பெருமெடுப்பில் முன்னேற முற்பட்ட படையினர் மீது விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
இதில் ஏழு படையினரது சடலங்களைக் கைப்பற்றிய புலிகள் அவற்றில் ஐந்தை நேற்று நண்பகல் கிளிநொச்சியில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்..
இவை வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினரால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற இரு சடலங்களும் இன்று படையினரிடம் ஒப்டைக்கப்படுமென புலிகள் தெரிவித்தனர்.