வீரகெட்டிய பிரதேச சபையின் உபதலைவர் சுமித் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இனம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் உள்ள கந்தஹேன என்ற இடத்தில் புதுவீடு திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், அந்த வீட்டு வாசலில் நின்றபோது இச்சம்பவம் இடம்பெற்றது.
வான் ஒன்றில் வந்தவர்கள் இவர் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது சடலம் தற்போது வலஸ்முல்ல ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றிருந்தார்.
இவருடன் உள்ள பழைய தகராறே இச்சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.