Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அம்பாறை பக்கிமிட்டியா, பன்னலகம பகுதி இராணுவ நிலைகள் மீது மோட்டார் தாக்குதல்
[11 - May - 2008] [Font Size - A - A - A]
*4 பொது மக்கள் காயம்

அம்பாறையில் பக்கிமிட்டியா மற்றும் பன்னலகம பகுதிகளில் நேற்று சனிக் கிழமை காலை இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகள் கடும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதல்களில் பன்னலகம பகுதியில் நான்கு பொது மக்கள் காயமடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

பன்னலகம இராணுவ முகாமைச் சுற்றி 20 க்கும் மேற்பட்ட மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்த போதே பத்து வயதுச் சிறுவனொருவன்,பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் தொட்டமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இத் தாக்குதலையடுத்து கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதலை முறியடித்ததாக படையினர் தெரிவித்தனர்.

இதேநேரம் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் கூறுகையில்;

அம்பாறை பக்கிமிட்டியா கோயில்கந்தை பகுதியில் இராணுவ வீதிச் சோதனை நிலையங்கள் மற்றும் காவலரண்கள் மீதும் பன்னலகம இராணுவ முகாம் மற்றும் வீதிச் சோதனை நிலையங்கள் மீதும் கடும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டது.

காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காவலரண்கள் சில அழிக்கப்பட்டுள்ளதுடன், படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
மோசடி இடம்பெற்ற பகுதிகளில் மீள்வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தல்
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதியமைச்சர் பாயிஸ் படையினரால் மீட்பு
கருணா விடயத்தில் பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டது பிரிட்டன்
அம்பாறை பக்கிமிட்டியா, பன்னலகம பகுதி இராணுவ நிலைகள் மீது மோட்டார் தாக்குதல்
தேர்தல் வரலாற்றிலேயே மோசமான முறைகேடுகள் தென்னிலங்கையிலிருந்து கைக்கூலிகளும் வரவழைப்பு
ஜனநாயக உரிமைகளுக்கு வரலாற்றில் மீண்டுமொருதடவை களங்கம் ஏற்பட்டுள்ளது
வீரகெட்டிய பிரதேச சபை உபதலைவர் சுட்டுக்கொலை
அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தேர்தல் களம் செல்ல அனுமதி இல்லை
படையினரின் ஐந்து சடலங்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளால் ஒப்படைப்பு
மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவி வழங்குமாறு வேண்டுகோள்
வன்முறை அதிகரிப்பால் வாக்களிக்க மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை
திருமலை உள்துறைமுக வீதியில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம்
மோசமான வன்முறைகள், பெரும் மோசடிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
வாக்களிப்புக்கு முன்னர் 88 வன்செயல்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்
பெரும் பதற்றத்தின் மத்தியில் மட்டு மாவட்டத்தில் வாக்களிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com