கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு அம்பாறை மாவட்டத்தில் நேற்று சுமுகமாக இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் (யானைச் சின்னம்) அல்- ஹாஜ் எம்.ரி. ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம். பைஸால் காசிம் ஆகியோர் நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய வாக்குச் சாவடியில் தமது வாக்குகளை அளிப்பதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.எல்.ஜமால்தீன் இந்த வாக்குச் சாவடிக்கு வருகை தந்து பொலிஸ் பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆராய்வதையும் காரைதீவு சண்முகா வித்தியாலய வாக்குச் சாவடியில் பெண்கள் வாக்களிப்பதையும் இங்கு காணலாம்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, கல்முனை மகளிர் கல்லூரியிலும், அமைச்சர் பேரியல் அஷ்ரப் கல்முனைக்குடி அல்-பத்திரியா மகாவித்தியாலயத்திலும் வாக்களிப்பதையும் கல்முனையில் வாக்களிக்கும் வாக்காளர்களையும் இங்கு காணலாம்.