தமிழகத்தின் கரப்பந்தாட்ட அணிக்கும் இலங்கை கரப்பந்தாட்ட அணிக்குமிடையில் கடந்தவாரம் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கடும் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணியும் பெண்கள் பிரிவில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.
ஆண்கள் பிரிவு அணிகளிடையே நடைபெற்ற 1 ஆவது போட்டியில் தமிழக அணி 25-19, 25-21,23-25, 25-17 புள்ளிகள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவு அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 25-20, 25-21, 25-20 புள்ளிகள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்றது.
ஆண்கள் பிரிவு அணிகளிடையே நடைபெற்ற 2 ஆவது போட்டியில் தமிழக அணி 25-21, 25-15, 25-20 புள்ளிகள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்றது.