Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பக்கம் - 02
 
ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்க வேலைத் திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படும் புதிய திட்டம். (தொடர்ச்சி)
பதில்: ஆம், பத்திரிகையாளரும் பெருந்தோட்டத்துறை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி சங்கத்தின் தலைவருமான ஏ.கே.எம்.பிள்ளை என்பவருடன் தொடர்பு கொள்ள முடியம். அவரது தொலைபேசி எண்: 077-3112540 மூலமாகவும், மின்னஞ்சல் Pillaiakm@yahoo.com மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும். இவர் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குகளை நாம் செய்துள்ளோம்.

கேள்வி: 1988, 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜே.வி.பி.என்ற அரசியல் அமைப்பு மேற்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் இந்திய மைசூர் பருப்பு முதலானவற்றை உண்ணக் கூடாது என்றெல்லாம் ஆர்ப்பரித்தனர். இன்றும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இந்தப் பிரிவினர் முயன்று வருகின்றனர். இத்தகைய ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் உங்கள் பணி எவ்வாறானதாக அமையும்.

பதில்: நாம் அரசாங்கத்தின் அமைப்பின் பேரில் தான் இங்கு வந்துள்ளோம். சுமுகமான நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகின்றோம். இலங்கையிலுள்ள தனியார் துறையுடன் இணைந்து தான் எமது வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். இதனால் எந்த வித நெருக்கடியும் ஏற்படாது என நம்புகிறோம்.

கேள்வி: இந்தியாவில் கையாளப்படும் ஆங்கில மொழி உச்சரிப்பு முதலானவை இலங்கையில் உள்ளவர்களுக்கு ஏற்புடையதாகாது என்ற கருத்தை இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் உங்களது நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமா?

பதில்: ஆங்கிலத்தில் புலமைத்துவம் பெற்ற பிரிவினர் இருக்கின்றனர். இவர்களுக்கு நாம் ஆங்கில மொழியை வளர்ப்பதல்ல எமது நோக்கம். இவர்களால் ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ள முடியும். ஏழை மக்களுக்கு அதாவது அடிமட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியில் தம்மை வளப்படுத்திக் கொள்வதற்கான ஆங்கில அறிவாற்றலை விருத்திசெய்வது எமது நோக்கம்.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com