Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
கனடாவுக்கு புலம்பெயர்ந்த சதாசிவம் சேவியர் (திங்கள்) எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பில் நிகழ்ந்த போது அதில் கலந்து கொண்டேன்.

86 வயதாகியும் இவர் சளைக்காமல் தொடர்ந்து தனது அனுபவங்கள் சிந்தனைகளை நூல்களாக வடித்துவருவது பாராட்டுக்குரியதே.

புங்குடுதீவில் பிறந்த இவர், தீவுப்பகுதி மீது கொண்டுள்ள அபிமானம், பற்று காரணமாகத் `தீவகன்' எனப் புனை பெயர் பூண்டு நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார்.

பிறர் நலம் பேணும் இவரின் நற்பண்புக்கு எடுத்துக்காட்டாக, ஊரில் இருந்த தனது பெரிய காணியை சர்வோதயத்துக்கு நன்கொடையளித்தமை, தனக்கு கிடைத்த வேலையை கஷ்டப்பட்ட இன்னொருவருக்கு வழங்கியமை, நூல்களின் வெளியீட்டினால் வரும் பணத்தை பாடசாலைக்கு உதவியமை முதலானவற்றை விழாவில் சுட்டிக்காட்டினார்கள்.

நலிந்தோருக்கு உதவும் நல்லிதயம் படைத்தவர்களின் நற்பணிக்கு நல்லாதரவு கொடுக்க வேண்டியது அவசியம் அல்லவா!

 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com