Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
விசேட பேராளர்களின் எண்ணிக்கையிலும் முதல் தடவையாக பராக் ஒபாமா முன்னிலையில்
[12 - May - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு தீவிரமாகப் போட்டியிட்டு வரும் செனட்டர் பராக் ஒபாமா விசேட பேராளர்களின் எண்ணிக்கையிலும் முதல் தடவையாக மற்றைய செனட்டரான ஹிலாரி கிளின்டனை முந்தியுள்ளார்.

முன்னர் ஹிலாரிக்கு ஆதரவளித்த இரு விசேட பேராளர்கள் உட்பட 4 விசேட பேராளர்கள் ஒபாமாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மாநிலங்கள் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆரம்ப கட்ட தேர்தல்களிலும் பேராளர்களின் எண்ணிக்கையிலும் ஒபாமா வலுவான முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்வதில் விசேட பேராளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவுக்கு புதிதாக 9 விசேட பேராளர்கள் தமது ஆதரவை வழங்கியிருப்பதன் மூலம் தற்போது ஒபாமா 275 விசேட பேராளர்களின் ஆதரவையும் ஹிலாரி 271 பேரின் ஆதரவையும் பெற்றுள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள வேட்பாளர் தெரிவிற்கு முன்னர் இன்னும் 6 மாநிலங்களில் ஆரம்பக்கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டில் நடைபெறவுள்ள ஜனநாயகக் கட்சியினரின் மாநாட்டில் 800 விசேட பேராளர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தெரிவு செய்வர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஏற்கனவே ஜோன் மக்கெய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
அமெரிக்காவில் இறந்த மூதாட்டியின் உடலுடன் இருமாதங்கள் வாழ்ந்த குடும்பம்
பிலிப்பைன்ஸில் பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோருக்கெதிராகப் பிரேரணை
விசேட பேராளர்களின் எண்ணிக்கையிலும் முதல் தடவையாக பராக் ஒபாமா முன்னிலையில்
பாகிஸ்தான் அரசுக்கும் போராளிக் குழுவொன்றுக்குமிடையில் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்து
மெஹ்தி இராணுவக் குழுவுடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு ஈராக்கிய அரசு இணக்கம்
பெனாசிர் பூட்டோவே வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கினார்
பெய்ரூட்டிலிருந்து ஹிஸ்புல்லாஹ் வாபஸ் திரிபோலியில் மோதல்கள் தீவிரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com