Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
[12 - May - 2008] [Font Size - A - A - A]
நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்து கொழும்பில் தடுத்து வைத்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

ராமசாமி சிவகுமார், வீரநாதன் சுதாகரன், செல்லையா ஜெகதீசன், ரட்ணம் கணகரட்ணம் ஆகிய நான்கு தோட்டப்புறத்து இளைஞர்களே கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கந்தப்பளையில் கைதுசெய்யப்பட்ட ஆறுபேருடன் இந்த நான்கு இளைஞர்களுமாக பத்துப்பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கந்தப்பளையில் கைதுசெய்து கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்க்கச் சென்ற கெங்கா என்ற பெண்மணியும் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் திருமணம் முடித்த அவரது மகனையும் இளைய மகளையும் எதிர்வரும் 10.05.2008 இல் கொழும்பில் விசாரணைக்கு வருமாறு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைத்துள்ளதாகவும் பிரதியமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக இளைஞர்கள் கைதுகளில் பாரபட்சமும் சில அரசியல்வாதிகளின் தலையீடுகளும் பெரும்சர்ச்சைகளை மலையகப் பகுதியில், குறிப்பாக நுவரெலியா பகுதியில், அமைதியற்ற நிலையை ஏற்படுத்திவருவதாகவும் சில சக்திகள் இதற்கு முயற்சித்து வருவதாகவும் பரவலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சகல ஆவணங்களும் வைத்திருந்தபோதிலும் கைது செய்யப்பட்ட நானுஓயா சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த கே.திலகவதி, கே.கமலாதேவி ஆகிய இருவரும் வத்தளை பொலிஸாரின் உத்தரவின்பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்ததுடன் அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளனர்.

வெலிவேரியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த ராமன் ராஜேந்திரன், தெகிவளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பண்டாரவளையைச் சேர்ந்த கே.யோகேந்திரன், கொகுகலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட லிந்துலையைச் சேர்ந்த தைரியநாதர் லில்லி ஆகியோரையும் விடுவித்து தருமாறு பெற்றோர் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் கோரியுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com