பதுளை மாநகர சபைக் குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தமிழர்களாவர். இவர்களிடம் தமது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடிய ஆவணங்கள் எதுவும் இருக்க வில்லையென்று பதுளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக்க விஜயரட்ன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருப்பவர்களில் மேலும் இருவர் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களென்றும், ஏனைய மூவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களென்றும் பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.