பெருந்தோட்டப் பகுதி ஆசிரியர்களில் ஐந்நூறு பேருக்கு இந்திய உதவி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் குறுங்கால பயிற்சி ஒன்று வழங்கப்படவுள்ளது.
பெருந்தோட்டப்பகுதி தமிழ் பாடசாலைகளுக்கு கடந்த வருடம் நியமிக்கப்பட்டு இதுவரை பயிற்சி பெறாத கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே இந்தக் குறுங்கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாணத் தமிழ்க்கல்வி அமைச்சர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
இந்தக் குறுங்கால பயிற்சி நெறி எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அட்டன் மற்றும் கண்டி வளநிலையங்களில் இந்திய வளவாளர்களால் வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்பு இவ்வாறானதொரு பயிற்சியைப் பெறாத ஆசிரியர்கள் தத்தமது விண்ணப்பங்களை பாடசாலை அதிபரினூடாக மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சு, இலக்கம் 41, கெட்டம்பே, பேராதனை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.