Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
[12 - May - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு

கல்வியின் மூலமே வாழ்வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கலாம் என்பதை உணர்ந்தே எனது அரசியல் காலச்சுவட்டில் இன, மத, மொழி கட்சி வேறுபாடின்றி மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இது போன்ற செயல்திட்டங்களின் மூலமே நாட்டில் இனப்பாகுபாடின்றி சமாதானத்துடன் வாழ வழி சமைக்கும் என்று மின்சக்தி அமைச்சரும் சிவில் பாதுகாப்பு பொறுப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி மகிந்தானந்த அபிவிருத்தி நிதியத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்து அவர் மேலும் கூறியதாவது; கிராமம் நகரம், பெருந்தோட்டப் புறங்களைச் சார்ந்த மக்கள் கல்வியில் மேம்பாடடைய வேண்டும்.

அதன் மூலமே தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி திட்டங்களும் ஏற்பட இடமுண்டு.

மேலும் கொழும்பு, கண்டி போன்ற அபிவிருத்தியடைந்த நகர்ப்புற பாடசாலைகளைப்போல் கிராமங்களும் தோட்டப்புறங்களும் கல்வியில் சிறப்புற வேண்டும் அப்போதே நாடும் சுபிட்சமடையும்.

இன்று சர்வதேச ரீதியில் ஆங்கில மொழி அனைத்து மக்களாலும் கவரப்பட்டும் கணிக்கப்பட்டும் கல்வியில் புலமை பெற்றுவருவதால் நாமும் ஆங்கிலத்தை முக்கிய பாடமாகக்கருதி படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தின் மூலமே நவீன தொழில் நுட்ப வசதிகளைப்பெறமுடியும். எனவே இந்த நிதியத்தின் மூலம் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் கணினி மற்றும் தொழிற்பயிற்சிக்குரிய வாய்ப்புகளும் வழங்கப்படும்.

இதேசமயம் கண்டி ரண்பிம, கொழும்பு ரோயல் போன்ற கல்லூரிகள் கிராமங்களிலும் பெருந்தோட்டப்பகுதிகளிலும் உருவாகவேண்டும். அதற்குரிய ஒத்துழைப்பு உங்களின் மூலமே பெறமுடியும்.

அதன் முதற்கட்டமாக குருந்துவத்தையில் குருந்துவத்தை ராஜகீய பாடசாலை ஒன்று அமைப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு பூர்த்தியடையும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் முதல் படிப்படியாக தரமுயர்த்தப்பட்டு கல்விப்பொதுத்தராதர உயர் வகுப்பு வரை நடாத்தப்படும்.

இதேவேளை ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய 3 மொழிகளிலும் பாடங்கள் போதிக்கப்படுவதுடன், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பை பெறும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

சில பாடசாலைகளுக்கு போக்குவரத்து பிரச்சினை அதிகமாகியுள்ளது. அதைத்தவிர்ப்பது எமது கடமையாகும். ஆரம்பிக்கவிருக்கும் பாடசாலைக்கு நாவலப்பிட்டி - குருந்துவத்தை - கும்பளை கருந்துவத்தை - வாகனவசதிகள் ஏற்படுத்தப்படும்.

அதேவேளை கல்வியில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். எனவே மகிந்தானந்த நிறுவனம் கல்விக்கும் தொழிற்பயிற்சிக்குமே முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

பெருந்தோட்ட, கிராமப்புற மக்களின் பிள்ளைகளுக்கு 1 வயது முதல் 5 வயது வரையிலான சத்துணவுத் திட்டம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவதுடன், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமும் உள்ளது.

இவர்களுக்கான நிதி வைப்பு வங்கிகளின் மூலமாக பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கங்க இகல கோறளை செயலாளர் திருமதி ரஞ்சனி ஜயக்கொடி, செயலாளர் வீரசிங்க, பொருளாளர் சரத் ஆகியோரும் உரையாற்றினர்.

இறுதியாக 100 (நூறு) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com