மாத்தறை ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை 12 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிய பெண் ஒருவரையும், அதற்குத்தரகராக செயற்பட்ட பெண் மருத்துவ ஊழியரையும் மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்குழந்தை பிறந்து சில நாட்களால் விற்கப்பட்டதால் அதன் தாய்க்குப் பாலூட்டாததன் காரணமாக நெஞ்சில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் மீண்டும் தான் விற்ற குழந்தையை தருமாறும் பணத்தைத் திருப்பித்தருவதாகவும் தரகர் மூலம் கோரிக்கை விடுத்தார். ஆனால் குழந்தையை வாங்கிய பெண் அக்கோரிக்கையை ஏற்கமறுத்தார். குழந்தையின் தாயும் தனது நிலைமையைக்கூறி மீண்டும் மீண்டும் குழந்தையைத் தருமாறு கெஞ்சினார். ஆனால் அப் பெண் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இதனையடுத்து அக்குழந்தையை விற்ற அத்தாய் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குழந்தையை வாங்கிய பெண்ணும், தரகரும் கைது செய்யப்பட்டனர். தனக்கு இது முன்றாவது குழந்தை என்றும், குடும்பக்கஷ்டம் காரணமாகவே குழந்தையை விற்றதாகவும் அப்பெண் பொஸாரிடம் தெரிவித்தார்.
குழந்தையைத் தாயாரிடம் மீண்டும் பெற்றுக் கொடுத்த பொலிஸார், குழந்தையை தத்தெடுக்கும் சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளனர்.