Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
[12 - May - 2008] [Font Size - A - A - A]
முகமாலையில் அண்மையில் நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகள் `சமாதானம்' எனப்படும் தமது தயாரிப்பு ஷெல்களை ஏவியிருந்தனர். இதனால், மணிக்கு 30 முதல் 40 பேரை இராணுவம் இழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ்சண்டே லீடர்ீ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

`சமாதானம்' என்னும் சொல்லை மிகவும் நகைச்சுவையாக, களத்தில் வீழ்ந்து வெடிக்கும் ஷெல்களுக்கு விடுதலைப்புலிகள் சூட்டியுள்ளனர். மோட்டார் குண்டுகள் மற்றும் வான் குண்டுகளுக்கு எல்லாம் புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஷெல்கள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற முகமாலைச் சமரிலும் அரசிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

53 மற்றும் 55 ஆவது படையணிகள் விடுதலைப்புலிகளின் முன்னணி அரணை அடைந்தபோது விடுதலைப்புலிகள் தாக்குதலை ஆரம்பித்ததுடன், 82 மி.மீ., 152 மி.மீ, 130 மி.மீ ஷெல்களும் சரமாரியாக ஏவப்பட்டன. இந்தச் சமரில் விடுதலைப்புலிகள் 1,000 இற்கும் அதிகமான ஷெல்களை ஏவியிருந்தனர். இதனால், மணிக்கு 30 முதல் 40 பேரை இராணுவம் இழந்திருந்தது.

53 ஆவது படையணியே 80 விகிதமான இழப்பை சந்தித்திருந்தது. விடுதலைப்புலிகள் தமது பீரங்கிகளில் சிலவற்றை சோரன்பற்றுப் பகுதியில் வைத்து இயக்கியிருந்தனர். இந்தச் சமரில் பயன்படுத்திய தமது சொந்தத் தயாரிப்பு மோட்டார் குண்டுகளை விடுதலைப்புலிகள் படையினருக்கு அருகில் வைத்தே பயன்படுத்தியிருந்தனர்.

`சமாதானம்' ஷெல் 2 கி.மீ. தூரவீச்சுக் கொண்டது. சிலர் அதன் தூரம் மிகவும் அதிகமெனத் தெரிவித்துள்ளனர். எனினும், விடுதலைப்புலிகள் மிக அளவில் ஷெல்களைப் பயன்படுத்தியது அவர்கள் புதிதாக ஷெல்களைத் தருவித்துள்ளதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`சமாதானம்' ஷெல்கள் விடுதலைப்புலிகளின் மூன்றாம் தலைமுறை ஷெல்களாகும்.

விடுதலைப்புலிகள் ஷெல்களை உருவாக்கும் தமது முயற்சியை 1980 களில் ஆரம்பித்திருந்ததாக ஆய்வாளர் றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஷெல்களின் பெயர் `பாபா'. 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் `பசீலன் - 2000'ஷெல்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருந்தனர். விடுதலைப்புலிகளின் ஆயுத ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட `பசீலன் - 2000' மோட்டார் 25 கி.கி. நிறையுடைய 1 கி.மீ. தூரத்திற்கு வீசத்தக்கது.

விடுதலைப்புலிகளின் இந்த தொழில்நுட்பப் பிரிவை குட்டிசிறி, மணி, ஒலிவர் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்களை ராஜூ வழிநடத்தி வந்தார். வடமராட்சியில் வல்லிபுரம் பகுதியிலேயே இந்த ஷெல்கள் முதலில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.

இரண்டாவது சோதனை வட்டுக்கோட்டை வயல் வெளியில் நடத்தப்பட்டது. எனினும், அது வெற்றிபெறவில்லை.

மூன்றாவது சோதனை கீரிமலைப் பகுதியில் நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றிருந்தது. இந்த சோதனைகளை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீடியோவில் பார்வையிட்டிருந்தார். அதற்கு லெப். கேணல் குட்டிசிறி பொறுப்பு வகித்திருந்தார்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ். கோட்டை முற்றுகையில் விடுதலைப்புலிகள் அதனைப் பயன்படுத்தியிருந்தனர். பின்னர் பலாலி தளம் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர். ்`பசீலன் - 2000' ஷெல் செலுத்திகளை விடுதலைப்புலிகள் உழவு இயந்திரத்தில் பொருத்திப் பயன்படுத்தியிருந்தனர்.

படையினர் தமது ஷெல் செலுத்திகளைக் கண்டறிவதைத் தவிர்க்கும் முகமாக விடுதலைப்புலிகள் ஆட்லறிப் பீரங்கிகளைக் கூட வாகனங்களில் பொருத்தியே பயன்படுத்தியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com