கம்பஹாவில் சில இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் காலை வரையும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 5 தமிழ் இளைஞர்களும், 20 சிங்கள இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், தமது வதிவிட பாதுகாப்புப் பதிவை உறுதிப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோல வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரையும் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மூன்று தமிழ் இளைஞர்களும் பதினொரு சிங்கள இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களைவிட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.