சிறுமி ஒருவருக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள பணம் தேவை என்று பொய்கூறி மோசமாக நிதி சேகரித்த அதிரடிப் படைவீரர் உட்பட இருவரை கொழும்பு பிரதம நீதிவான் நிசந்த ஹப்பு ஆராய்ச்சி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி ஒருவரின் பெயரில் இருதய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று வைத்திய நிபுணரின் கடிதத்துடன் இவர்கள் புறக்கோட்டை வர்த்தகப் பகுதியில் ரிக்கட் மூலம் பணம் சேகரித்த போது புறக் கோட்டை பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இவர்கள் மீது மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் மோசடியாக பணம் சேகரித்த விடயம் தெரியவந்தது.
ஒருவர் அதிரடிப்படை முகாமில் இருந்து தப்பி ஓடிவந்தவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அவரை குடா ஓயா அதிரடிப்படை முகாமில் மீண்டும் சேர்ப்பதற்கு அனுமதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.