நீதிமன்ற விசாரணைக்கு வராத ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் அஜித் அனவரட்ன பிடியாணை பிறப்பித்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் அங்குள்ள பாதுகாப்பு பெண் ஊழியருடன் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவர் நீதிமன்றத்துக்கு வராதது குறித்து நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து இவரைக்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு மேலதிக நீதிவான் கிறாண்ட்பாஸ் பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பித்தார்.