ரஷ்ய புதிய ஜனாதிபதி திமிதிரி மெததேவுக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தொலைபேசி ஊடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரஜ்ய ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி தொலைபேசி ஊடாக உரையாடியதாக மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு உறவுகளையும் கட்டியெழுப்புவது தொடர்பாக இந்தத் தொலைபேசி உரையாடலில் பேசப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளுடன் ஏனைய தொடர்புகள் குறித்தும் இவர்கள் பேசியதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரமே ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக திமிதிரி மெததேவ் பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.